பரமக்குடியில் இரவிலும் கண்விழித்து பணியாற்றும் பத்திரப்பதிவு அலுவலர்கள்

பரமக்குடியில் பத்திரப்பதிவு இரவிலும் நடைபெறுவதால் பத்திரபதிவு அலுவலர்கள் கண்விழித்து பணியாற்றி வருகின்றனர்.;

Update: 2021-10-20 16:25 GMT

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி நேரம் முடிந்தும் இரவு முழுவதும் பத்திரப்பதிவு நடைபெறுகிறது. 

வழக்கமாக அரசு அலுவலகங்கள் காலை 10 மணிக்கு பணிகள் துவங்கி மாலை 6 மணிக்கு முடிந்துவிடும். ஐந்து அல்லது ஆறு மணிக்கு அலுவலர்கள் எல்லாம் வெளியேறி விடுவார்கள். ஆனால் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி நேரம் முடிந்தும் மின் விளக்குகளை ஜரூராக எரிய விட்டு இரவு முழுவதும் பத்திரப்பதிவு நடைபெறுகிறது.

அலுவலர்களும் பகல் நேரத்தை போல சுறுசுறுப்பாக வேலை பார்த்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் அருகில் உள்ள நகராட்சி அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற அலுவலகங்கள் எல்லாம், 5 அல்லது 6 மணிக்கு அலுவலர்கள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், பரமக்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் இரவு வெகுநேரம் வரை திருவிழா கோலமாக பொது மக்கள் வருவதும், அவர்களுக்கு பத்திரங்களை இரவு நேரத்தில் கூட பதிவு செய்து கொடுப்பதும் நடந்து வருகிறது. தீபாவளி நேரத்தில் சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

Tags:    

Similar News