40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் பாரதிநகர் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் பாரதிநகர் மக்கள். நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Update: 2021-10-11 11:02 GMT

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 25 வது வார்டு பாரதி நகரில் பராமரிப்பின்றி காணப்படும் கால்வாய்.

பரமக்குடி பாரதி நகர் மக்கள் 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 25 வது வார்டு பாரதி நகர் மேற்கு தெருவில் சுமார் 100 குடியிருப்புகள் உள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாரதி நகரில் சாலை, குடிநீர், சாக்கடை வசதிகள் இன்றி 40 வருடங்களாக பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சாக்கடை வசதி இல்லாததால் மழைக் காலங்களில் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து வீடுகளுக்குள் வந்து விடுகின்றன.

இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை வசதி இல்லாததால் ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் பாரதி நகருக்குள் வர மறுக்கின்றனர். இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என மிகுந்த சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள், நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுப்பதாக இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Tags:    

Similar News