தென்னிந்திய பல்கலை.க்கு இடையிலான இறகுப்பந்து போட்டி: பரமக்குடி மாணவன் தேர்வு
தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டி. பரமக்குடி கல்லூரி மாணவன் தேர்வு.
தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டி. பரமக்குடி கல்லூரி மாணவன் தேர்வு.
ஆந்திர மாநிலம் குண்டூர் கேஜிஎப் பல்கலைக்கழகத்தில் 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான, தென்னிந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கு இடையே இறகுப்பந்து போட்டி டிசம்பர் 6 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான அழகப்பா பல்கலைக்கழக அணி வீரர்கள் தேர்வு போட்டியில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கல்லூரி அணி வீரர்கள் கலந்து கொண்டனர். 6 வீரர்கள் தேர்வு செய்ததில், பரமக்குடி அரசு கலைக் கல்லூரி வணிகவியல் துறை மாணவன் கோபி கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, ஆந்திராவில் நடைபெறும் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டியில் கலந்து கொள்கிறார்.
இதற்கான ஆணையை பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முதல்வர் குணசேகரனிடம் வழங்கினார். மாணவன் கோபி கிருஷ்ணனுக்கு உடற்கல்வி இயக்குனர் பிரசாத்,துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.