நீட் தேர்வில் 107 பேர் தேர்ச்சி: இராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 107 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 107 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை அனுமதிக்கான நீட் தேர்வு செப்.12ல் நடந்தது. இதில், இராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் 83 பேர், மாணவர்கள் 39 பேர், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் 103 பேர், மாணவர்கள் 41 பேர், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 20 பேர், மாணவர் 8 என 206 மாணவிகள், 89 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறை சார்பில் இணைய வழி மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நவ.1ல் வெளியான தேர்வு முடிவின்படி 287 மாணவ, மாணவியர்களில் 107 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
இத்தேர்வில் பரமக்குடி அரசு உதவி பெறும் பள்ளி மாணவி சர்சிதா 480 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். எமனேஸ்வரம் அரசுபள்ளி மாணவி பிரபாவதி 250 மதிப்பெண் எடுத்து அரசுப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களில் முதலிடம் பெற்றார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த வல்லுனர்கள், கருத்தாளர்கள், ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோரை முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து பாராட்டினார்.