வேட்புமனு தாக்கல் முன்னேற்பாடுகள் தீவிரம்
வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்.;
2021 தமிழக சட்டபேரவைக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதன் அடிப்படையில் நாளை 12.3.2021 முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளதால், வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை நாளை முதல் தாக்கல் செய்ய உள்னர். அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர். பரமக்குடியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பெயிண்ட் மூலம் எல்கை கோடு போடும் பணி இன்று நடைபெற்றது. இதே போன்று கொரானா தொற்றின் காரணமாக தேர்தல் ஆணையம் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளை அமல்படுத்திடவும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.