சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது
இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது,வலசை வரும் பறவகைள் எண்ணிக்கை குறைவு.;
தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலையத்தில் இன்று காலை பறவைகள் கணகெடுப்பு பணி துவங்கியது. பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் உயிரியல் மற்றும் விலங்குகள் சம்பந்தமான கல்வி பயிலும் கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழக அளவில் உள்ள பறவைகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து செல்லும் பறவைகள் என தனித்தனியாக கணக்கிடப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளான கண்மாய் ஊரணி பகுதிகளிலும், மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தியத்தில் அமைந்து தீவுகளிலும் ஏராளமான பறவைகள் தங்கி வாழ்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தாங்கல், பெரிய கண்மாய், நீழ, மேல செல்வனூர், சக்கரகோட்டை, சித்தரங்குடி மற்றும் பல்வேறு குளங்கள் சார்ந்த பகுதிகளில் அதிகமான பறவைகள் தங்கி வாழ்ந்து வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் மாதம் வரை தனுஸ்கோடி பகுதிகளில் பிளமிங்கோ என்று கூறப்படும் பூநாரை அதிக அளவில் இருப்பதாக கடந்த ஆண்டுகளில் எடுத்த கணகெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாண்ட் பைபர் பெலிக்கான், பின்டெய்ல், கில்ட், கார்னரி ஆகிய வெளிநாட்டு பறவைகளும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வலசை வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்தாண்டு தமிழகம் முழுவதும் அதிகளவு மழை பொழிவு இருந்ததால் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் உள்ளுர் வலசை வரும் பறவைகள் இந்தாண்டு மிகவும் குறைந்த அளவில் வலசை வந்துள்ளது. மேலும் பறவைகளின் வரத்து மற்றும் பறவைகளின் எண்ணிக்கை குறித்து முழுமையான தகவல் நாளை கணகெடுப்பு நடத்தபட்ட பின் தெரிய வரும் என பறவைகள் கணகெடுப்பில் ஈடுபட்டுள்ள பறவை தன்னார்வலர் தெரிவித்தார்.