மேடையில் தோன்ற வருகிறார், மன்னர் ராஜராஜ சோழன்..! சோழர்களின் உண்மை வரலாறு..!
ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சோழர்களின் உண்மை வரலாற்றை மேடையேற்றத் தயாராகி வருகிறது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.;
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் மும்முடி சோழன் என்னும் சோழர்களின் உண்மையான வரலாற்றைப் பேசும் நாடகத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது . தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் திரு வாகை சந்திரசேகர் வெளியிட உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், கவிஞர் நெல்லை ஜெயந்தா ,தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஒளவை அருள் ,இசை அமைப்பாளர் தாஜ் நூர் ,தயாரிப்பாளர் வைத்தீஸ்வரன் ,இணை தயாரிப்பாளர் கஜேந்திரபாபு ,மக்கள் தொடர்பு அலுவலர் பொன்னேரி பிரதாப் ,நாடக ஆக்க இயக்குநர் ஆர் கே ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை யோகஸ்ரம் டிரஸ்டியின் சார்பாக அதன் நிறுவனர் டாக்டர் ஏ.பி.வைத்தீஸ்வரன் புதிதாகத் தொடங்கி உள்ள நாடகத் தயாரிப்பு நிறுவனம்தான் சென்னை ட்ராமாஸ், இதில் முதல் படைப்பாக வருகிறது மும்முடி சோழன் வரலாற்று நாடகம்.
இதில் மன்னராகப் பதவியில் தொடங்கி அரசியல், ஆன்மிகம், தற்சார்பு முறை என தலைமுறைகள் வாழ, பாதை வகுத்துத் தந்த இராஜராஜன் தன் வாழ்விலே எப்படி சிவனடியாராக நிலை கொண்டார், என்பதை மிக பிரமாண்ட முறையில் அதிக பொருட் செலவில் மேடையில் அரங்கேற்றப்படும் நாடகம்தான் இந்த மும்முடி சோழன்.
இதைப் பற்றி தயாரிப்பு நிறுவனம் கூறும்போது, இன்றைய முன்னணி மேடை நாடகக் கலைஞர்கள், சினிமா கலைஞர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், மேடை ஒலி, ஒளி அமைப்பில் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்த இருப்பதாகவும் கூறியது.
இந்த நாடகத்திற்காக ஒரு சிறப்புப் பாடலை இசையமைப்பாளர் தாஜ்நூர் இசை அமைத்து உள்ளார். பாடலை கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற, (10/06/2023) ஜூன் மாதம் 10 ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற இருக்கும் இந்த நாடகமானது உலகம் முழுவதும் கொண்டு செல்லும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், இதற்கு இயல் இசை நாடக மன்றமும், தமிழ் வளர்ச்சித் துறையும் ஆதரவு தந்து வழி நடத்தி செல்கிறது என்பது சிறப்புத் தகவல்.
முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள் குழு:
தயாரிப்பு: சென்னை டிராமாஸ்
நிறுவனர்: டாக்டர்.ஏ.பி.வைத்தீஸ்வரன்
இணை தயாரிப்பு : கல்வியாளர் கஜேந்திர பாபு
நாடக ஆக்கம் - வசனம் - சிறப்பு பாடல் காட்சி இயக்கம்: தஞ்சை RK
இசை - தாஜ்நூர்
பாடல் - கவிஞர் நெல்லை ஜெயந்தா
தயாரிப்பு மேற்பார்வை : விவேக் சின்ராசு
நாடக இயக்கம்: ஏ.எஸ்.மணி
படத்தொகுப்பு : லூவி ஜான்சன்
மக்கள் தொடர்பு : பொன்னேரி பிரதாப்
சிறப்பு கதாபாத்திரங்கள்:
இராஜ ராஜசோழன்: ‘முத்துக்குமார்’
பஞ்சவன் மாதேவி: (சன் நியூஸ் செய்தியாளர்) ‘சுஜாதா பாபு’
கருவூரார் சித்தர்: ‘ஏ. பி. வைத்தீஸ்வரன்’
இராஜேந்திர சோழன்: ‘நரேன் பாலாஜி’
குந்தவை: ‘ரேவதி’
முதன்மை அமைச்சர்: விவேக்சின்ராசு
சிறப்பு பாடல் காட்சியில் அருண் மொழிவர்மனாக கௌரவத் தோற்றத்தில் KPY சாம்பியன் நவீன் நடித்துள்ளார்.