புதுக்கோட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

புதுக்கோட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடியே கல்லூரி சென்ற மாணவ மாணவிகள்.;

Update: 2021-11-08 03:59 GMT

புதுக்கோட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத மழையில் நனைந்தபடியே கல்லூரி சென்ற மாணவ மாணவிகள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் தமிழகம் முழுவதும் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் வட கிழக்கு பருவமழையின் காரணமாக அதிக மழை பெய்யும் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டமும் உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது

தொடர் மழையின் காரணமாகமாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்து, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் கல்லூரி மாணவ மாணவிகள் மழையில் நனைந்துகொண்டே கல்லூரிகளுக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து மழைக்காலம் என்பதால் நோய் தொற்று பரவ கூடிய சூழ்நிலையில் தற்போது அதிக அளவில் கூட்டமாக பேருந்துகளில் ஏறி மழையில் நனைந்தவாறே கல்லூரிக்கு செல்வதால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மழைக்காலங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கல்லூரி மாணவ மாணவிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News