மதக் கலவரங்களை தூண்டுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை-தமிமுன் அன்சாரி
மதக் கலவரங்களை தூண்டும் வகையில் பேசுபவர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
மதக் கலவரங்களை தூண்டும் வகையில் பேசுபவர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள் அத்தகைய போக்கை தற்போது விரும்பவில்லை என புதுக்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி செய்தியாளரிடம் பேசுகையில்...
பெகாசஸ் ஒட்டு கேட்ட விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேச்சும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு செயல் கண்டிக்கத்தக்கது. கொரோனா இரண்டாவது அலையில் தமிழக அரசின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளது.
திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்வரின் வேகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பல் துறையில் அரசின் செய்யக் கூடிய மாற்றங்கள் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள். ஆய்வுக் கூட்டங்கள் அவர்கள் செய்யக்கூடிய செயல் திட்டங்கள் ஆகியவை மிகவும் பாராட்டத்தக்கது எதிர்க்கட்சி தலைவர்கலே பாராட்டக் கூடிய அளவிற்கு அரசின் செயல்பாடு உள்ளது. திமுக அரசை கண்டித்து அதிமுக அறிவித்துள்ள போராட்டம் தேவையற்றது.
எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். அதிமுக மற்றும் சசிகலா இடையே நடக்கும் நிகழ்வுகள் அவர்கள் கட்சி விவகாரம் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி என்ன சொள்கிறதோ அதுதான் அதிமுகவில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள்.
பாஜகவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். மதவெறியைத் தூண்டக் கூடிய அவர்கள் ஒரு மதத்தை இழிவுபடுத்தி அவர்களுடைய மதத்தைப் பற்றிப் பேசுபவர்கள் அவர்கள் யாராக எந்த மதமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் சரிசமமாக எடுக்க வேண்டும்.
இதுபோன்று பேசுபவர்களை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களை நிராகரிக்கின்றனர் குறிப்பாக இளைஞர்கள் இதனை விரும்பவில்ல . இது ஆரோக்கியமான மாற்றம். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றை படிப்படியாக நிறைவேற்றும் அவர்கள் பதவியேற்ற நாள் முதலே கொரோனா அளவைக் கட்டுப்படுத்துவதில் தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து அதே நிலைப்பாடு வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என அவர் தெரிவித்தார்.