ஆளுநரை எதிர்த்து இ.கம்யூ.,போராட்டம் நடத்தினால் அடித்து விரட்டுவோம்: எச்.ராஜா

தமிழக ஆளுநரை எதிர்த்து இ.கம்யூ.,போராட்டம் நடத்தினால் அடித்து விரட்டுவோம் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-30 13:29 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு அமைப்பினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி மதப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆர்எஸ்எஸ் பிரமுகர் கணேஷ்பாபு உள்ளிட்ட அந்த பகுதி மக்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் அந்த மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பு தங்களிடம் இந்த செல்போன்களை கணேஷ் பாபு பரித்து விட்டதாகவும் பெண்களை இழிவாக பேசி விட்டதாகவும் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் காவல் துறையினர் கணேஷ் பாபு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையினர் இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக கணேஷ்பாபுவை விடுதலை செய்யக்கோரியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் புரட்சி கவிதாசன், மாவட்ட தலைவர் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் 300க்கும் மேற்பட்ட பாஜக ஆர்எஸ்எஸ் சங்பரிவார் உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கணேஷ் பாபுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, நாங்கள் மதமாற்றம் செய்யத்தான் வந்தோம் என்று அந்த பகுதிக்கு வந்த இரண்டு பெண்கள் கூறியுள்ளனர். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

இதன்பேரில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் கொடுத்த பொய்யான புகாரின் மீது வழக்கு பதிவு செய்து கணேஷ் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உடனடியாக அவர் விடுதலை செய்ய வேண்டும். சிறைக்கு செல்லும் அளவிற்கு கணேஷ் பாபு என்ன தவறு செய்தார். எந்த அழுத்தத்தின் பேரில் மாவட்ட எஸ்பி இந்த நடவடிக்கை எடுத்தார் என்று விளக்கம் அளிக்க வேண்டும்.

ஐபிஎஸ் பணி என்பது அகில இந்திய பணி என்பதை அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். தமிழக அரசு சிஎஸ்ஐ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. முதல்வரே இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழக முதல்வரே சிஎஸ்ஐ விழாவிற்கு சென்று இங்கு நடப்பது உங்கள் ஆட்சி தான் என்று கூறியுள்ளார். அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சனாதனத்தை அழிப்பதற்காக தான் விடுதலை சிறுத்தை யோடு நாங்கள் கூட்டணியில் உள்ளோம் என்று கே.எஸ்.அழகிரி பேசியுள்ளது மொழியாக்கம் செய்து உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அனுப்பியுள்ளேன் வரும் தேர்தலில் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்யம்தான் கிடைக்கப் போகிறது.

தமிழகத்தில் மதவெறியை மதக் கலவரத்தைத் தூண்டுவது பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் திமுக காரர்கள் தான்; நாங்கள் அல்ல.  ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக இருந்தவர்கள் தான் பெரியார் இயக்கத்தினர்.

ஆளுநரை எதிர்த்து அவரை தமிழகத்தை விட்டு வெளியேறும் வரை இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த எச் ராஜா, ஆளுநரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தினால் நாங்கள் அவர்களை அடித்து விரட்டுவோம். அவர்கள் எங்களை என்ன செய்வார்கள் என்றார்.

Tags:    

Similar News