விராலிமலை ஜல்லிக்கட்டுக்கு கால்கோள் நாட்டுவிழா

Update: 2021-01-04 07:00 GMT

உலகப் புகழ்பெற்ற கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான முகூர்த்தகால் நடும் பணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை கலந்து கொண்டு முகூர்த்த காலை ஊன்றி துவக்கி வைத்தார்.

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக கின்னஸ் சாதனை படைத்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு இந்த வருடம் வரும் 17 ம் தேதி நடைபெற இருக்கிறது. போட்டி நடைபெறும் அம்மன்குளம் ஜல்லிக்கட்டு திடலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கால்கோள் நட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News