திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

Update: 2020-12-25 05:01 GMT

ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்கும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்சி இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீரங்கத்திற்கு முந்தைய திவ்ய தேசமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் விளங்குகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதனர் 64 சதுர யுகங்களுக்கு முன்னால் சுயம்பு மூர்த்தியாக அவதாரம் எடுத்தாகவும் ஆனால் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் சயன பெருமாள் சுயம்பு மூர்த்தியாக 96 சதுர யுகங்களுக்கு முன்பு அவதாரம் எடுத்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள பெருமாள் சயன நிலையில் 30 அடி நீளம் கொண்டவராக உள்ளார்.. மேலும் தமிழகத்திலேயே இங்க தான் ஒரே கோயில் வளாகத்தில் வைணவ திருத்தலமும் சைவ திருத்தலமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பு மிக்க திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கேலயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றால் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது. இதனால் சொர்க்க வாசலுக்கு வெளிப்புறம் நின்ற ஏராளமான பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர். இதில் சர்வ அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சியளித்தார்.சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., பாலாஜி சரவணன், வருவாய் கோட்டாட்சியர் பால தண்டாயுதபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைணவ தலங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது.

Tags:    

Similar News