சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2021-10-18 11:10 GMT

தலைமை செயலகம் 

சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட ஐந்து ஐபிஎஸ் அலுவலர்கள் டிஜிபி ஆக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அலுவலர்களான சங்கர் ஜிவால், ஏ.கே. விஸ்வநாதன், அபாஷ் குமார், டி.வி.ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கும் டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சு வலியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலம் குணமடைந்து இன்று வீடு திரும்பினார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் சென்னை காவல் ஆணையராக பதவியை அவர் பதவியை தொடருவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கே.சங்கர், ஜி. வெங்கடராமன், அமரேஷ் புஜாரி, வினிட் தேவ் வாங்கேட், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News