பிரதமரின் கிசான் சம்மான் நிதி: தமிழகத்தில் 36,68,729 விவசாயிகளுக்கு பிரதமர் வழங்கினார்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சுமார் 36 லட்சம் விசாயிகளுக்கு ரூ.738 கோடி நிதியை பிரதமர் வழங்கினார்;
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இன்று 36 லட்சத்து 68 ஆயிரத்து 729 விவசாயிகளுக்கு, ரூ.738 கோடியே 99 லட்சத்து 2000 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டது.
பிரதமரின் கிசான் திட்ட 10-வது தவணைத் தொகையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுவித்தார். நாடு முழுவதும் மொத்தம், 10 கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 520 விவசாயிகளுக்கு, ரூ. 20,946 கோடியே 77 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 36 லட்சத்து 68 ஆயிரத்து 729 விவசாயிகளுக்கு, ரூ.738 கோடியே 99 லட்சத்து 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அது போல புதுச்சேரியில் 10,142 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.