கைது வாரண்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது-தமிழக டிஜிபி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில்,கைது வாரண்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது - தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு;

Update: 2021-07-23 11:18 GMT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில்,கைது வாரண்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது - தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல்துறையின் 30-வது டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் மிகவும் நேர்மையான அதிகாரி, மக்களுக்கு நெருக்கமானவர், கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்த சைலேந்திர பாபு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பதவி ஏற்ற நிலையில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் சட்ட ஒழுங்கை பாதிக்காக முக்கியத்துவம் கொடுப்பேன் என பதவியேற்றவுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.மேலும் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில்,கைது வாரண்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிளாஸ் எடுத்த டிஜிபி சைலேந்திர பாபு.. சிக்ஸர்!

Tags:    

Similar News