விஜயகாந்த் மறைவு: பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்

Update: 2023-12-28 06:19 GMT

பிரதமர் மோடியுடன் விஜயகாந்த் - கோப்புப்படம் 

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"விஜயகாந்த மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. பொது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை நிரப்புவது கடினம். விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவுகூர்கிறேன்." என தெரிவித்துள்ளார்.


விஜயகாந்த் மறைவிற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை 'பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்' என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News