பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்

ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.70 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் தகவல்

Update: 2023-02-05 18:15 GMT

பைல் படம்

பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்:  மத்திய  அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

பாரம்பரிய நகரங்கள் மற்றும் பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய  அரசு தெரிவித்துள்ளது.

பாரம்பரியத்துக்கு ஹைட்ரஜன் என்ற பெயரில் திட்டத்துக்கு தலா ரூ.80 கோடியில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரஜன் ரயிலை இயக்க ஒவ்வொரு வழித்தடத்தில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.70 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: பசுமை போக்குவரத்து தொழில்நுட்ப முறையில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது அதிகம் லாபம் தரும். முதன்முறையாக பாரம்பரிய மற்றும் மலைவாழ் நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. பாரம்பரியத்துக்கு ஹைட்ரஜன் என்ற பெயரில் திட்டத்துக்கு தலா ரூ.80 கோடியில் ஹைட்ரான் ரயில்களை இயக்க ரயில்வே முடிவே முடிவு செய்துள்ளது. ஹைட்ரஜன் ரயிலை இயக்க ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.70 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார்.

முதலாவது ஹைட்ரஜன் ரயில் வடக்கு ரயில்வே மண்டலத்தில் ஜிந்த் - சோனிபட் இடையே திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டுக்குள் ஜிந்த் - சோனிபட் இடையே ஹைட்ரஜன் ரயிலை சோதனை முறையில் இயக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News