பெரம்பலூரில் உலக அயோடின் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூரில் நடந்த உலக அயோடின் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
அக்.21ம் தேதி உலக அயோடின் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக அயோடின் தின விழிப்புணர்வு நிகழ்வும், அதனை தொடர்ந்து துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.
செட்டிகுளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவசந்திரன்,வட்டார மருத்துவர் மகாலெட்சுமி,வட்டார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடு குறித்தும்,பொதுமக்களிடம் விழிப்புணர்வு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சித்த மருத்துவர் பிரபா,ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, மருந்தாளுனர் கண்ணகி,ஆய்வக நுட்புனர் நளினி,செவிலியர் ரேவதி, சுகாதார ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.