உலக சிக்கன நாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு போட்டி
உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.;
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான சிக்கன சேமிப்பு நாள் விழாவை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் சிறுசேமிப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற 36 பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், 2020-21ஆம் ஆண்டில் சிறுசேமிப்பில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய எஸ்.ஏ.எஸ். எம்.பி.கே.பி.ஒய். சேர்ந்த 6 முகவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுத் தொகையும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா வழங்கினார்.