ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2022-03-06 14:18 GMT

பெரம்பலூரில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில் தி.மு.க. கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் -மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான சோமு.மதியழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

மாவட்ட கழக செயலாளரும் -மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் சி.இராஜேந்திரன் கலந்து கொண்டு தி.மு.க. கொடியேற்றி வைத்தார். அதன் பிறகு மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் - பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகிய இருவரும், 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், நாரணமங்கலம் கிளைச் செயலாளர் க.வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி சந்திரன்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் விஜயகோபாலபுரம் செல்வராஜ், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர். அருண், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சி. கலைமணி,கழக நிர்வாகிகள் செல்வகுமார், துரைராஜ்,செந்தில்குமார், ந.ஸ்ரீதர்,சுப்பையா,கிளைச் செயலாளர், வைத்தியலிங்கம்,திருவரசன்,பிரபாகரன், நாட்டார்மங்கலம் விஜய்அரவிந்த் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News