பெரம்பலூர் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் பிம்பலூர் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் சுறா என்கிற ராஜ்குமார் தலைமையில் ஒன்றிய தலைவர் சின்னதுரை முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சிவா உறுப்பினர்கள் அட்டையினை வழங்கினார்.இதில் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் ராஜதுரை, ஒன்றிய அமைப்பாளர் பிகில் குமார், இணையதள அணி நிர்வாகி ரஞ்சித்குமார் பிம்பலூர் கிளை நிர்வாகி மனோ மற்றும் பிரசாந்த் மாவட்ட தலைமை நிர்வாகி கலந்து கொண்டனர்.