பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கம் சார்பில் பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி
பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கம் சார்பில், முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.;
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் மறைவுக்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள், கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தின் சார்பில், மறைந்த முப்படை தளபதி மற்றும் மறைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தி. சத்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயக்கத்தின் பொறுப்பாளர்களான கண்ணன், கார்த்திக், அருண் பிரசாத், உதிரம் நண்பர்கள்குழு நாகராஜ், பெரம்பலூர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் சங்க தலைவர் ராமலிங்கம், மேலப்புலியூர் கலைச்செல்வன் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு, ராணுவ தளபதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.