திருவளக்குறிச்சியை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும்: பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் என கேட்டு கலெக்டிடம் கிராமமக்கள் மனு அளித்தனர்.

Update: 2021-10-27 02:31 GMT

பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த திருவளக்குறிச்சி கிராம மக்கள்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திலுள்ள, திருவளக்குறிச்சி ராஜா மலை, குட்டியப்பன் காலனி, ஆகிய பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்

தற்பொழுது எங்கள் திருவளக்குறிச்சி கிராமம் பாடாலூர் ஊராட்சியின் கீழ் உள்ளது. திருவளக்குறிச்சி, ஊத்தாங்கால், ராஜா மலை. குட்டியப்பன் காலனி ஆகிய இடங்களில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளது. அவற்றில் மொத்த வாக்காளர்கள் சுமார் 1500 க்கு மேல் உள்ளனர். எங்கள் கிராமத்திற்கு கிடைக்கவேண்டிய அடிப்படை மற்றும் அரசாங்க சலுகைகள் அனைத்தும் முழுமையாக கிடைப்பது கிடையாது.

எங்கள் பகுதிக்கு அரசின் அனைத்து வளர்ச்சி பணிகளும், அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும். இதற்காக திருவளக்குறிச்சி. ஊத்தாங்கால், ராஜா மலை, குட்டியப்பன் காலனி ஆகிய இடங்களை இனைத்து திருவளக்குறிச்சியை தலைமை இடமாக கொண்டு தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும்.  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News