நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2022-01-29 14:35 GMT

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்ற மருத்துவ மாணவர் இளையராஜா.

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமததைச்சேர்ந்த இளையராஜா மகன் ஆகாஷ். இவர் நீட் தேர்வில் 262 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.

இவருக்கு தமிழ் வழிக்கல்வியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மருத்துவ மாணவர் இளையராஜா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News