பெரம்பலூர் அருகே சாலையோத்தில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம்,வி.களத்தூர் ஏரிக்கு செல்லும் பழைய மரவனத்தம் கிராமத்தின் சாலை ஓரமாக கைலியால் ஒரு பெண் குழந்தை சுற்றப்பட்டு கிடந்தது, இன்று காலை அவ்வழியே சென்ற கிராம மக்கள் அது என்ன என்று பார்த்த பொழுது அந்த தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குழந்தை யாருக்கு பிறந்தது, யார் குழந்தை? சாலையோரத்தில் வீசிச் சென்றனர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .