பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தரும், தலைவருமான அ. சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ். செந்தில்குமார், 89 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில், வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் தொல்காப்பியன், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். வெற்றிவேலன் உள்பட பேராசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக, தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.