பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு

பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2022-01-05 12:36 GMT

பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. மணி.

கொரோனா மீண்டும் பரவதொடங்கி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.பொதுமக்கள் முகக் கவசம் அணிதல்,சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் புதியபேருந்துநிலையம் அருகே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணி,விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய அவர்,அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணியவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.முகக் கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்த காவல்துறை கண்காணிப்பாளர் மணி,அவசியம் இன்றி வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் , பெரம்பலூர் போக்குவரத்து ஆய்வாளர் சுப்பிரமணியன், சக்திவேல் , செல்வராஜ், சீனிவாசன், உட்பட பல காவல் துறையினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News