பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம் சர்க்கரை கழக ஆணையர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நடந்தது.;

Update: 2021-12-23 15:03 GMT

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44வது பேரவை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சர்க்கரைக் கழகம். சர்க்கரைத்துறை ஆணையர் ஹர்மந்தர்சிங்  தலைமையில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா  முன்னிலையில்  நடைபெற்றது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆலையின் 500-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், அனைத்து கரும்பு விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் வைத்த கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு சர்க்கரை கழக தலைமை அலுவலர்களால் பதிலுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  கரும்பு விவசாயம் செழித்திட அனைத்து ஒத்துழைப்பும் நல்குவதாக தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் பொது மேலாளர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தலைமை நிர்வாகி (பெரம்பலூர் சர்க்கரை ஆலை) ரமேஷ், தமிழ்நாடு சர்க்கரைக் கழக தலைமை அலுவலர்கள் மற்றும் ஆலையின் அனைத்து துறைத் தலைவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News