நில ஆவணங்களில் உள்ள எளிய பிழைகளை சரி செய்வதற்கான சிறப்பு முகாம்

பெரம்பலூரில் நில ஆவணங்களில் உள்ள எளிய பிழைகளை சரி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2021-11-17 17:00 GMT

பெரம்பலூரில் நடந்த நில ஆவணங்களில் உள்ள எளிய பிழைகளை சரி செய்வதற்கான சிறப்பு முகாம்.

பெரம்பலூர் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி நில ஆவணங்களில் உள்ள எளிய பிழைகளை சரி செய்வதற்கான சிறப்பு முகாம்  நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தி.சுப்பையா  தலைமை வகித்தார். பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் சமூகப்பாதுகாப்பு வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

இம்முகாமில் செங்குணம் வருவாய் கிராமத்திற்குரிய பொதுமக்கள் கணினி பட்டாவில் ஏற்பட்டுள்ள சிறுசிறு பிழைகளை சரி செய்வதற்கு மனு அளித்தனர்.

இம்முகாமில் செங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் க.சந்திரா, ஒன்றிய கவுன்சிலர் கலையரசன், பெரம்பலூர் மாவட்ட துணை ஆய்வாளர் முத்துச்செல்வி. பெரம்பலூர் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சர்மிளா, பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் பெரியண்ணன், பெரம்பலூர் வருவாய் ஆய்வாளர் சசிகுமார் செங்குனம் கிராம நிர்வாக நல்லுசாமி, கிராம உதவியாளர் அனிதா மற்றும் குமார் அய்யாவு உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News