பெரம்பலூர் மாவட்ட தேமுதிக செயலாளராக சிவா ஐயப்பன் நியமனம்
தேமுதிக வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளராக இருந்து வந்த இவரை தேமுதிக மாவட்ட செயலாளராக அறிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.;
தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் துரை.காமராஜ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, இக்கட்சியிலிருந்து இருந்து விலகி திமுக கட்சியில் இணைந்து கொண்டார். இதனால் பெரம்பலூர் மாவட்ட தேமுதிக கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருந்த நிலையில், கட்சியின் தலைமை இடத்தில் இதற்கான ஆள் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி இன்று தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் எளம்பலூர் சாலையில்,ரோஸ் நகர் பகுதியில், வசித்து வரும் சிவா ஐய்யப்பன், தேமுதிக வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளராக இருந்து வந்த இவரை தேமுதிக மாவட்ட செயலாளராக அறிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தேமுதிக பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பொருப்பேற்க்க உள்ள சிவா ஐயப்பன் இன்று 45-வது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு கட்சியில் இந்த அறிவிப்பு அவருக்கு மிகவும் மகிழ்ந்து அளிப்பதாகவும், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தேமுதிக கட்சி சிறந்த முறையில் வழிநடத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.