பெரம்பலூர் அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு

பெரம்பலூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-27 17:35 GMT
பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகள் ( கோப்பு படம்).

பெரம்பலூர் அருகேயுள்ள சோமண்டாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் வீட்டு ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 வெள்ளாடுகள், மற்றும் அதே ஊரைச் சேர்ந்த, விவசாயி சுப்பிரமணியன் என்பவர் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 4 வெள்ளாடுகளை மர்ம நபர்கள் அக்டோபர் 26ம் தேதி நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அக்டோபர் 27-ம் தேதி இன்று காலை பட்டியில் இருந்த ஆடுகள் திருட்டுபோனது தெரிய வந்தது, இதுகுறித்து விவசாயிகள் இருவரும் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் . கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News