பெரம்பலூரில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாவாசன் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடந்தது.;
பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு "தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக வேந்தரும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவருமான அ.சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி, தலைமையுரை ஆற்றினார்.
தொடர்ந்து தன்னம்பிக்கை பேச்சாளரான மூத்த பத்திரிகையாளர் குரு. மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு சாதிப்பது, உயர்கல்விப்படிப்பில் தற்போதைய நிலை குறித்து மாணவர்களுக்கு எடுத்துதரைத்தார்.
அதனை தொடர்ந்து மற்றொரு சிறப்பு விருந்தினர் லயன்ஸ் கிளப் உறுப்பினர் சிவராஜ் உலகில் சாதனைப் புரிந்த சாதனையாளர்களின் பட்டியலையும் அவர்கள் எந்த துறையில் சாதனை புரிந்தார்கள் என்பதையும், மேலும் அந்த வரிசையில் மாணவர்களும் சாதனை படைக்க வேண்டும் என்று தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து மேத்யூ கருத்துக்களை தன்னுடைய இசையால் இசைந்து மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
மேலும் இவிழாவில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் முதல்வர் சுகுமார், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் சாந்தி, பிரேமலதா, கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் அவர்கள் வரவேற்புரையும் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரேமலதா நன்றி உரையாற்றினர்.