அரிசிகடை பூட்டை உடைத்து ரூ.37 ஆயிரம் திருட்டு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு
பெரம்பலூரில் அரிசிகடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் 37 ஆயிரம் ரூபாய் திருடி சென்றது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் சாமியப்பா நகரை சேர்ந்த தவுலத்கான்(58), அரிசி கடை (பிஸ்மில்லா அரிசிகடை) வைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு இவரது கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த 37 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். அருகில் இருந்த வினோத் குமாரின் மெடிக்கல் கடை பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பணம் ஏதும் இல்லாததால், அரிசி கடையில் கிடைத்த 37 ஆயிரம் ரொக்கத்துடன் சென்றுள்ளனர். காலையில் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்த அரிசி கடை உரிமையாளர் தகவல் தெரிவித்தன் பேரில் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.