ரோஸ் நகரில் பாதாள சாக்கடையில் அடைப்பு - வீடுகளில் தேங்கும் கழிவுநீர்

பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், கழிவு நீர் வீடுகளில் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.;

Update: 2021-11-27 05:15 GMT

ரோஸ் நகர் பகுதியில் வீட்டை சுற்றி தேங்கியுள்ள கழிவு நீர்.

பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை வழியாக, கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ள்ளது. இதனால்,  அப்பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் உள்ள குளியல் அறை மற்றும் கழிவறைகளின் வழியாக கழிவுநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து தேங்கி நிற்கின்றன. துர்நாற்றம் வீசி வருவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால், அப்பகுதி மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தொடர் மழை பெய்து வருவதால் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து, குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கின்றன. கொசு மற்றும் புழுக்கள் இருப்பதால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசிக்கும் சூழலில், போர்கால அடிப்படையில் கழிவுநீரை அப்புறப்படுத்தி,  பாதாள சாக்கடை அடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என,  அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News