பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு;
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் கிராமத்தில் நடுத்தெரு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். அப்போதுதான் இக்கோயிலில் உள்ள உண்டியலை திறந்து காணிக்கை எண்ணப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இந்த கோவிலில் உண்டியல் இருந்த இடம் பெயர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்து உண்டியலை உடைத்தது தெரியவந்தது.
இந்த உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.