பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை உடனடியாக மூட கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை உடனடியாக மூட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-01-27 03:09 GMT
பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை உடனடியாக மூட கோரிக்கை

 வீட்டின் மேற்கூரையை துளைத்து சென்ற துப்பாக்கி குண்டு.

  • whatsapp icon

பெரம்பலூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லை அருகில் அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் இயங்கி வருகிறது. அதிலிருந்து வெளிவந்த குண்டு அருகாமையில் உள்ள மருதடி ஈச்சங்காடு என்கிற கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மேற்கூரையை துளைத்து சென்றது கிராமவாசிகளை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்பாக புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திலிருந்து வெளியான குண்டு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்த சிறுவனின் உயிரை பலி வாங்கிய சம்பவமே ஆறாத நிலையில்,  பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் நம்மை மேலும் அதிர்க்குள்ளாக்குகிறது.

அரசு இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு, மக்கள் வசிப்பிடங்களில் இருந்து 10 கி.மீ தொலைவிற்கு எவ்வித துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களும் செயல்படாதவாறு சட்டம் இயற்ற வேண்டும். ஏற்கெனவே இயங்ககூடிய பயிற்சி தளங்களையும் கண்காணித்து அறிக்கை சமர்பிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை தடை செய்தது போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் அந்த துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தையும் தடைசெய்து உடனடியாக மூடிட வேண்டும். இனி ஒரு உயிர் பறிபோகும் முன் இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழக அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News