பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புத்துணர்வு முகாம்

குறைகளை கூறும் பொது மக்களிடம் நாம் அன்பாகவும் பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட எஸ்பி மணி;

Update: 2022-02-25 14:00 GMT

பெரம்பலூரில் பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் செயல்பட்டு வரும் பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் லி. பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்  ஏ.சரவணசுந்தர்  வேண்டுகோளின்படி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.மணி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன்  அறிவுரையின் பேரில், பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  ஜெயசித்ரா மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தினர்.

இதில், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பெண்கள் உதவி மைய இலவச தொலைப்பேசி எண்ணான 198-க்கு வரும் அழைப்புகளை நல்ல முறையில்  கையாள வேண்டும். குறைகளை கூறும் பொது மக்களிடம் நாம் அன்பாகவும் பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி . 

இதில் பெண்கள் உதவி மைய காவலர்கள், 1098 நிர்வாகி திவ்யா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா, குழந்தை நல வாரிய தலைவர் அய்யம்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News