பெரம்பலூர் அருகே மழை நீரால் பொதுமக்கள் அவதி- அதிகாரிகள் மீது புகார்

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பகுதியில் மழை நீரால் அவதிப்படும் பொதுமக்கள் அதிகாரிகள் மீது புகார் கூறி உள்ளனர்.

Update: 2022-01-02 09:08 GMT

ஒரு குடிசையை மழை நீர் சூழ்ந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தோப்பு பகுதியில் 30 ஆண்டாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் தங்கள் பகுதியில் குடியிருக்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

மழைக்காலங்களில் வீடுகளை சுற்றியும் தண்ணீர் தேங்கி நிற்பதும்  விஷ பூச்சிகள் கொசுக்கள் அதிகமாக வருவதால் மர்ம நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்பகுதியில் புளிய மரங்கள் அதிகமாக இருப்பதனால் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை வந்தால் பொதுமக்கள் மரண பயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதிகளில் வேண்டுகோளாக உள்ளது.

Tags:    

Similar News