பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.;

Update: 2022-03-07 12:52 GMT
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

பைல் படம்.

  • whatsapp icon

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 193 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News