குருதி கொடை அளித்த பெரம்பலூர் காவலருக்கு போலீஸ் எஸ்.பி. பாராட்டு
அறுவை சிகிச்சைக்கு தேவையான குருதியை தானமாக அளித்த பெரம்பலூர் காவலருக்கு போலீஸ் எஸ்.பி. பாராட்டு தெரிவித்து உள்ளார்.;
போலீஸ்காரர் கிருஷ்ணன் இரத்த தானம் செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏ.பி. பாசிட்டிவ் இரத்த வகை தேவை என்ற செய்தி பரவியது.
இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் கிருஷ்ணன் மனித நேயத்துடன் தாமாகவே முன்வந்து அந்நபருக்கு இரத்த தானம் செய்தார். இந்த காவலரின் மனித நேய செயலினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று வெகுவாக பாராட்டினார்.