பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தின் சிறப்பு பிரிவுகளை டி.ஐ.ஜி. ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தின் சிறப்பு பிரிவுகளை டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆய்வு செய்தார்.;
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆய்வு செய்தார்.
திருச்சி சரகத்தில் உள்ள காவல் மாவட்டங்களை வருடத்திற்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வின்போது அனைத்து சிறப்பு பிரிவுகளையும் பார்வையிட்டும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், அலுவலக நிர்வாக அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்கள் , அலுவலக உதவியாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.