வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன்
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்;
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள நகர பகுதிகளில் வாக்களித்த வாக்காளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.
மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் இன்று, பெரம்பலூர் நகரத்திற்குட்பட்ட 2,3, 8,10,12,13,17,18,19 ஆகிய வர்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை9 மணியளவில்,9-வது வார்டுக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அந்த பகுதியில் புதிய உறுப்பினர் சேர்த்தலை மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். அதன் பிறகு அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் எம்.பிரபாகரன் நன்றி தெரிவித்து, வீதி,வீதியாக சென்று அந்த பகுதிகளில் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன்,
மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன்,
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜி.என்.பி.ஒஜீர்,நகர துணை செயலாளர் சபியுல்லா, 9- வார்டு செயலாளர் எம்.மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.