முதலமைச்சருடன் காணொலி மூலம் பெரம்பலூர் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை
முதலமைச்சருடன் காணொலி மூலம் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.;
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.
தமிழக முதலவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம், பெரம்பலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனைக்கூட்டம் பி.பி.ரெசிடென்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ்ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் விஜய், குன்னம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.