பெரம்பலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் வெளியீடு
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா கலந்து கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 01.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 3,00,795 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,71,820 வாக்காளர்களும் என மொத்தம் 5,72,615 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர்நடைபெற்ற வாக்காளர் சிறப்பு திருத்த முகாமிற்கு பின் ஜனவரி 5ஆம் தேதியன்று . .
இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடி மையங்களில் மொத்தம் 3,05,617 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,48,330 வாக்காளர்களும், பெண்கள் 1,57,259 வாக்காளர்களும் மற்றும் இதரர் 28 வாக்காளர்களும் உள்ளனர்.
குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 2,76,988 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,36,226 வாக்காளர்களும், பெண்கள் 1,40,746 வாக்காளர்களும் மற்றும் இதரர் 16 வாக்காளர்களும் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,82,605 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,84,556 வாக்காளர்களும், பெண்கள் 2,98,005 வாக்காளர்களும் மற்றும் இதரர் 44 வாக்காளர்களும் உள்ளனர்.
இதனை தொடர்ந்து, 05.01.2022 முதல் தொடர் திருத்தப் பணிகள் மெற்கொள்ளபடவுள்ளன. எனவே, வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் போது பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள தவறியவர்கள் 05.01.2022 முதல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகிய அலுவலகங்களில் மாற்றம் செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுப்பையா, நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன், அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் பலர்கலந்து கொண்டனர்.