பெரம்பலூர் நகர் மன்ற தேர்தலுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

பெரம்பலூர் நகர் மன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.;

Update: 2022-02-18 14:32 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி,மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு, பூலாம்பாடி என நான்கு பேரூராட்சிகள் உள்ளன.பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுஉறுப்பினர் பதவிகளுக்கும் மற்ற நான்கு பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதிலும்110 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் 400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நாளை வாக்குப் சாவடிகளில் வாக்குப் பதிவு பணிகளில் 540 அலுவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இதனையடுத்து அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மிண்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மற்றும் வாக்குப்பதிவிற்கான பொருட்கள் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்ட்டன. இதேபோன்று பூலாம்பாடி, அரும்பாவூர்,குரும்பலூர்,லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், மற்றும் வாக்கு பதிவிற்கான பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

Tags:    

Similar News