பெரம்பலூர்: சித்தளியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிக்கு பூமி பூஜை

பெரம்பலூர் மாவட்டம் சித்தளி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

Update: 2021-12-23 15:15 GMT

பெரம்பலூர் மாவட்டம் சித்தளி ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன வெண்மணியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பகுதிநேர நியாய விலைக்கடையினை  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். பெரியவெண்மணி நியாய விலைக்கடையில் 982 குடும்பங்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் சின்ன வெண்மணியிலிருந்து பொதுமக்கள் பெரிய வெண்மணிக்கு சென்று பொருட்கள் வாங்க சென்று வரக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இருப்பிடத்திற்கு அருகிலே சின்ன வெண்மணியில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்பட்டது. இதன் மூலம் 351 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர்.

அந்தூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தினையும், மனோகரன் தோட்டம் முதல் எம்.பி.சி காலனி வரை 600மீ நீளத்தில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தும், அதனைத்தொடர்ந்து அந்தூர் கிராமத்திலுள்ள வருத்தாங்குளத்தை சுற்றி ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து  சித்தளி கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் 60,000லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளுக்கான பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

மருவத்தூர் கிராமத்தில் ஆஞ்சநேயர் தெரு பகுதியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் காங்கிரிட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியும், மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில்; கட்டுக்கட்டும் அறை, ஊசிபோடும் அறை, ஆய்வகம், மருத்துவர் அறை, மருந்தகம், மருந்துக்கிடங்கு, தொற்றாநோய் பிரிவு மற்றும் கழிவறையுடன் 1400சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளையும்  அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்(பொது விநியோகத்திட்டம்) கே.கே.செல்வராஜ், கூட்டுறவு சங்க செயலாளர் நல்லதம்பி, பொதுப்பணித்துறை(மருத்துவ பணிகள்) உதவி செயற்பொறியாளர்  அன்பரசி, உதவி பொறியாளர் கவிதா, மருவத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.நேரு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி(துங்கபுரம்), விஜயா(சின்னவெண்மணி), உமா சந்தோஷ் குமார்(அந்தூர்), முக்கிய பிரமுகர்கள் செல்லப்பிள்ளை, மதியழகன், ராஜேந்திரன், நீலமேகம், விநாயகாராஜ், குமார், அமுதா அன்பழகன், அந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி செல்வராஜ், சித்தளி ஊராட்சிமன்ற தலைவர் ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News