மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.சார்பில் பாராட்டு
மருத்துவ படிப்பிற்கு தேர்வான பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு தி.மு.க.சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தமிழ் வழியில் கல்வி பயின்ற கிராமப்புற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர்கள் கீர்த்தனா,ஆகாஷ், பிரவீன் குமார்,வினிதா,சாரதி,மலர் ஆகிய 6நபர்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஏற்பாட்டில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இவர்கள் 6 பேருக்கும், தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.இராசாஎம்.பி, ஸ்டெத்தாஸ் கோப் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்,மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் சண்முகம், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.