இரவு நேர ஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்
பெரம்பலூர் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டன; சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
தமிழகத்தில் கொரொனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நேற்று முதல் தினமும் இரவு 10 மணி முதல், காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான கடைகளும், நேற்றிரவு மூடப்பட்டன. காய்கறி மளிகை எலக்ட்ரானிக், ஷாப்பிங், மால்கள், திரையரங்குகள், துணிக்கடைகள் மாற்றும் மார்கெட் பகுதியில் உள்ள கடைவீதிகள் அனைத்து கடைகளும் என அனைத்தும் மூடப்பட்டு, பெரம்பலூர் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் காவல்துறையினர். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்தியாவசிய அவசர தேவைகளான மருந்தகம் மருத்துவமனைகள் மட்டும் திறக்கப்பட்டு அவசர தேவைகளுக்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.