பெரம்பலூர் மாவட்ட காவல் துறை: புதிய நாய்க்குட்டிக்கு பெயர் 'கவின்'

பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு புதிதாக வாங்கப்பட்ட நாய்க்குட்டிக்கு ‘கவின்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.;

Update: 2021-11-17 16:12 GMT

பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு புதிதாக வாங்கப்பட்ட நாய்க்குட்டிக்கு ‘கவின்’ என பெயர் சூட்டப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மோப்ப நாய் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் நடைபெறும் குற்றம் மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய மேற்படி மோப்ப நாய்களை பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வாங்கிய நாய்க்குட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி  பார்வையிட்டார். பின்னர் அந்த நாய்க்குட்டிக்கு 'கவின்' என்று பெயர் சூட்டினார்.

Tags:    

Similar News