தேசிய போட்டியில் வெற்றி பெற்ற பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி மாணவர்கள்

தேசிய போட்டியில் வெற்றி பெற்ற சீனிவாசன் கல்லூரி மாணவர்களுக்கு அதன் தாளாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-09 11:55 GMT

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சீனிவாசன் கல்லூரி தாளாளர் வாழ்த்து தெரிவித்தார்.

பெரம்பலூர்  சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் கரூரில் நடைபெற்ற " பென்காக் சிலாட் " போட்டியில் கலந்து கொண்டார்கள் . கடந்த மார்ச் 05.03.2022 மற்றும் 06.03.2022 போன்ற தேதிகளில் கரூரில் " பென்காக் சிலாட் " தேசிய அளவில் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது .

200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போட்டியில் இக்கல்லூரியைச் சேர்ந்த முதுநிலை முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவன் செ.முத்துகலைஞன் , இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவன் இரா.ராகுல் போன்ற இரண்டு மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள் .

முதுஅறிவியல் முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை செ.முத்துக்கலைஞன் என்ற மாணவன் 40 கிலோ பிரிவில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தினையும் , இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை இரா.ராகுல் என்ற மாணவன் 90 கிலோ பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றார்கள் .

அதற்காக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன்  மாணவர்களைப் பாராட்டினார் . சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெற்றிவேலன் , துணை முதல்வர் பேரா.கோ.இரவி  உடனிருந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள் .

Tags:    

Similar News